×

கொரோனா பணியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆகஸ்ட் 5, 6ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம்

* 12 ஆயிரம் பேர் பங்கேற்பு
* வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தகவல்

சென்னை: கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 2 நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என்று வருவாய்த்துறை சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் கூறியதாவது: தமிழகத்தில் ெகாரோனா நோய்த் தடுப்பு பணியின்போது உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை இதுவரை வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஏற்கனவே வருவாய் அமைச்சரை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்ட பின்பும்,  அரசின் உயர் அலுவலர்களிடம் பல முறையீடுகள் அளித்த பின்பும், உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. எனவே, ெகாரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

நோய் தொற்றுக்கு ஆளான 260க்கும் மேற்பட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு உயர்தரமான மருத்துவச் சிகிச்சை மற்றும் அரசாணையின்படி கருணை தொகை 2 லட்சம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடக்கவுள்ளது. தமிழகத்தின் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும், வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை 12,000 அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். ஆகஸ்ட் 5ம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாநில, மாவட்ட, வட்டக்கிளை நிர்வாகிகள் கலந்துகொள்ளும்,  1 நாள் எழுச்சியான உண்ணாவிரதப் போராட்டம் சமூக இடைவெளியுடன் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : leave protest ,corona victims ,Corona , Corona, casualties, relief, struggle
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்