×

செலவை பத்தி கவலை வேணாம்: ஜெகன் தாராளம்

திருமலை: ஆந்திராவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்தார். ஆந்திரா, குண்டூர் மாவட்டத்தில் உள்ள முதல்வர் ஜெகன் மோகனின் முகாம் அலுவலகத்தில், நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர், ஜெகன் அளித்த பேட்டியில், ‘‘மருந்துகள், மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு, அடுத்த 6 மாதங்களில் துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கான மருத்துவர்களை நியமிக்க 1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

தற்போது, கொரோனா பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களின் வசதிகளுக்காக ஒரு நாளைக்கு 6.5 கோடி செலவு செய்யப்படுகிறது. 138 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. தொற்று இறப்பை குறைக்க, விலை உயர்ந்த மருத்துவ சிகிச்சைக்கு ‘டாக்ஸிலிசுமாப்’ தடுப்பூசி செலுத்த வேண்டும். இதற்காக ஒரு நோயாளிக்கு குறைந்தபட்சம் 35 ஆயிரம் செலவிட வேண்டி இருக்கும். இருப்பினும், தயங்காமல் செலவு செய்து இறப்பை குறைக்க வேண்டும்,’’ என்றார்.


Tags : Jagan , Andhra, Corona, Chief Jeganmohan
× RELATED திருப்பதியில் ஓட்டுக்கு பணம்...