×

தேவைப்பட்டால் பிரதமர் வீட்டு முன் போராட்டம் என்று ராஜஸ்தான் முதல்வர் கெலாட் எச்சரிக்கை

ஜெய்ப்பூர்: தேவைப்பட்டால் பிரதமர் வீட்டு முன் போராட்டம் என்று ராஜஸ்தான் முதல்வர் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி குடியரசு தலைவரை சந்தித்து முறையிடுவோம் என்று கெலாட் அறிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள ஃபேர்மாண்ட் ஓட்டலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கெலாட் பேசியுள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக செயல்பட்டதால், அம்மாநில துணை முதல்வராக  இருந்த சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து, சச்சின் பைலட் தரப்பினர், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த, உயர்நீதிமன்ற ஜெய்ப்பூர் கிளை நீதிபதிகள், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒருதரப்பாக சேர்க்கவும் நீதிபதிகள் அனுமதியளித்தனர்.

இதனால், சச்சின் பைலட் உள்ளிட்டோர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு, முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.Tags : Gelad ,Rajasthan ,house ,Chief Minister ,Gehlot , Rajasthan, Chief Minister, Gehlot
× RELATED பீகார், ராஜஸ்தானில் நீட் வினாத்தாள்...