×

கோவில்பட்டியில் உள்ள நூற்பாலையில் 85 தொழிலாளர்களுக்கு கொரோனா!!!

கோவில்பட்டி:  கோவில்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் 85 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், விதிமுறைகளை மீறி ஆலை செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவில்பட்டி இரயில்வே எதிரே தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் 1110 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த வாரம் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதில் சுமார் 85 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த புதன்கிழமை முதல் 5 நாட்களுக்கு நூற்பாலை ஆலை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால், இன்று அதே நூற்பாலையின் மற்றொரு கிளையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேனில் அழைத்து சென்று வேலை தொடங்க நூற்பாலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனையறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தடையை மீறி தொழிலாளர்களை அழைத்து செல்ல முற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தடையை மீறி நூற்பாலை செயல்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும், தடையை மீறி ஆலை செயல்படுகிறது என்றும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : spinning mill ,Corona ,Kovilpatti , Corona ,85 workers , spinning mill , Kovilpatti
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...