×

ராஜஸ்தான் ஆளுநருடன் முதல்வர் அசோக் கெலாட் திடீர் சந்திப்பு!!!

ராஜஸ்தான்:  ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிய திருப்பமாக ராஜஸ்தான் ஆளுநரை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசி வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் தலைமையிலான 19 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது தற்போது உள்ள சூழலில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அம்மாநில உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ராவை நேரில் சந்தித்து சட்டப்பேரவையை உடனடியாக அமைக்க உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று முதல்வர் கெலாட் கோரிக்கை வைத்துள்ளார்.

அப்போது சட்டசபையில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை தற்போது ஆண்டுகொண்டிருக்கும் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைப்பை கலைக்க முயன்றதாக கூறி துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்கள் மீது கட்சியானது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே சமையத்தில் 19 பேரும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக மாநிலத்தினுடைய சட்டப்பேரவை தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து 19 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வருகின்ற 27ம் தேதி வரை இந்த எம்.எல்.ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று, அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கானது வரும் திங்கட்கிழமை வர இருப்பதால், தற்போது ஒரு புதிய திருப்பமாக மாநிலத்தினுடையே முதல்வர் அசோக் கெலாட், மாநிலத்தின் ஆளுநராக கல்ராஜ் மிஷ்ராவை நேரடியாக அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். அப்போது, சட்டசபையை உடனடியாக அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், ராஜஸ்தானில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சட்டசபை திறக்கப்படுமா? என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இந்நிலையில், தனது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் கல்ராஜ் மிஷ்ராவை மாநில முதல்வர் சந்தித்து பேசி கொண்டிருக்கிறார்.

Tags : Ashok Gelad ,Governor ,meeting ,ashok gehlot ,Rajasthan , Chief Minister, ashok gehlot, Rajasthan !!!
× RELATED ஆந்திராவில் ஆட்சியமைக்க தெலுங்கு...