ஹூஸ்டன் ,தூதரகத்தை மூடியத்திற்கு பழிக்கு பழி... செங்டு நகரில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்தை மூட சீனா அதிரடி உத்தரவு!!

பெய்ஜிங்: ஹூஸ்டன் நகரில் தூதரகத்தை மூடியதற்கு பதிலடியாக தங்களது நாட்டின் செங்டு நகரில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது. ஹாங்காங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்தியது, ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் மற்றும் தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்த நினைப்பது ஆகியவற்றால், சீனா மீது அமெரிக்கா கடும் ஆத்திரத்தில் உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் அறிவார்ந்த சொத்துரிமை மற்றும் தனிநபர் ரகசிய பாதுகாப்புக்காக ஹுஸ்டனில் உள்ள சீன துணை தூதரகத்தை மூட வேண்டும் என கூறி அமெரிக்கா உத்தரவிட்டது.

இதனிடையே ஹூஸ்டன் சீனா தூதரகத்தில் முக்கிய ஆவணங்களை சீனா எரித்துவிட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதுமட்டுமல்லாமல் மேலும் பல சீனாவின் தூதரகங்களை இழுத்து மூடப் போவதாகவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை சீனா கடுமையாக விமர்சித்திருக்கிறது. இது நேர்மையான செயல்பாடு அல்ல என்று அமெரிக்கா மீது சீனா காட்டத்தை காட்டியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக சீனாவின் செங்டு நகரத்தில் உள்ள அமெரிக்காவின் துணை தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது. இந்த தூதரகமானது 1985-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 150 சீன நாட்டவர் உட்பட 200 ஊழியர்கள் இந்த செங்டு துணை தூதரகத்தில் பணிபுரிகின்றனர். இருநாடுகளிடையேயான தூதரக மூடல்கள் நடவடிக்கை மோதல் போக்கை அதிகரித்துள்ளது.

Related Stories:

>