×

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவில் டிக் டாக்கை தடை செய்ய செனட் குழு ஒப்புதல்: நாட்டின் தேசிய உளவுத்துறைக்கு சீன நிறுவனங்கள் ஆதரவு அளிக்கும் சட்டத்தால் ஆபத்து..!!

நியூயார்க்: உலகம் முழுவதும் உள்ள டிக் டாக் செயலியை மாதம்தோறும் பயன்படுத்தும் 2.6 கோடி மக்களில் 60 சதவீதம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்த 16 முதல் 24 வயதுடைவர்கள் என கடந்த ஆண்டு அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும், 2017-ம் ஆண்டு சீனா அறிமுகப்படுத்திய ஒரு சட்டம், நாட்டின் தேசிய உளவுத்துறைக்கு சீன நிறுவனங்கள் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய கடமை உள்ளதாக தெரிவித்தது.. இதனால் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் எந்நேரமும் தகவல்களை சீன அரசுக்கு தந்துவிடக்கூடிய ஆபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து, சமீபத்தில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. முன்னதாக அமெரிக்க செனட்டர்களும் டிக் டாக் செயலியை தங்கள் நாட்டில் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் ஜோஷ் ஹவ்லி என்ற செனட்டர் கொண்டு வந்த அரசாங்க சாதனங்களில் டிக் டாக்கை தடை செய்யும் சட்டம் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசாங்க விவகாரங்களுக்கான செனட் குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு இச்சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர், டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், டிக் டாக் மற்றும் சீனாவுடன் தொடர்புடைய பிற செயலிகள் மீது பரந்த அளவிலான தடையை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இது போன்ற பிரச்னையை வருங்காலங்களில் தவிர்ப்பதற்காக டிக் டாக் தனது நிறுவன தலைமையகத்தை அமெரிக்கா அல்லது லண்டனிற்கு மாற்ற பேசி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு ஊழியர்கள், அரசு சாதனங்களில் சீன செயலியான டிக் டாக்கை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்திற்கு செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Tags : companies ,committee ,Senate ,US ,India ,country ,Chinese ,panel , Indiam US, Tik-tok ban
× RELATED டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு...