கொரோனா பாதிப்பு போல கிடுகிடுவென உயரும் தங்க விலை; சவரன் ரூ.256 உயர்ந்து ரூ.39,032க்கு விற்பனை; ரூ.40 ஆயிரத்தை நெருங்குவதால் இல்லத்தரசிகள் வேதனை!!

சென்னை: தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.39 ஆயிரத்தை கடந்தது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் தங்கம் விலை உயர அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் உயர்ந்து வருகிறது. கடந்த 9ம் தேதி சவரன் ரூ.37,744க்கும் விற்கப்பட்டது. அதன்பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.56 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,773க்கும், சவரனுக்கு ரூ. 448 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,184க்கு உயர்ந்தது. இது தங்கம் விலை வரலாற்றில் வரலாறு காணாத உச்சம்.

நேற்று முன்தினம் காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.68 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,785க்கும், சவரனுக்கு ரூ.544 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,280க்கும் விற்கப்பட்டது. நேற்று மீண்டும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து, புதிய வரலாற்று சாதனையை படைத்தது. அதாவது நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.74 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,847க்கும், சவரனுக்கு ரூ.592 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,776க்கும் விற்கப்பட்டது. இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 256 உயர்ந்து ரூ.39,032க்கு விற்பனையாகிறது. இது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,879க்கு விற்பனை ஆகிறது. குறுகிய நாட்களில் இந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது இல்லை. தற்போதைய விலையையே தாங்கி கொள்ள முடியாத நிலையில் நகை வாங்குவார் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை அதிகரிக்க தான் அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.

வெள்ளியை பார்த்தீர்கள் என்றால் கடந்த ஒரு வாரத்தில் கிலோ ரூ.66,000 அதிகரித்துள்ளது.  இது அபரிதமான விலை உயர்வாகும். தங்கத்தின் மீது எப்படி முதலீடு செய்து வருகிறார்களோ?, அதே போல மற்ற உலக நாடுகளில் வெள்ளியின் மீதும் முதலீடு செய்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் வெள்ளியின் மீது முதலீடு அதிகரித்து வருகிறது. இதுவும் வெள்ளி விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இதனால் தங்கம், வெள்ளி விலை வரும் நாட்களில் தினம், தினம் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

Related Stories:

>