குன்றத்தூர் பிடிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது. குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு பணிகளுக்காக இங்கு தினமும் வந்து செல்கின்றனர். இங்கு 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். இந்த வளாகத்தில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அலுவலகம், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் பயிற்சி பள்ளி, வட்டார கல்வி அலுவலகம், இ சேவை மையம் உள்பட பல அலுவலகங்கள் இயங்குகின்றன. தற்போது குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகளவு லஞ்சம் பெறுவதாக சென்னை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார்கள் சென்றன. இந்நிலையில், நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு துறையினர் 10க்கும் மேற்பட்டோர், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் சேதனை செய்தனர். தொடர்ந்து, அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

Related Stories:

More
>