×

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் சிவசங்கரை 9 மணி நேரம் விசாரித்தனர்.

தங்கக்கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் அண்மையில் பிடிபட்டது.

இந்தக் கடத்தல் விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் அவரது மனைவி, தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. முடுக்கிவிட்டுள்ள நிலையில், கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.



Tags : Sivasankar ,NIA ,Kerala ,IAS ,Swapna Suresh , Kerala, Gold Smuggling, Swapna Suresh, IAS, Sivasankar
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...