×

பருவநிலை மாறுப்பாட்டை எதிர்க்கொள்ள மரம் நடுவதே ஒரே தீர்வு : மரம் நடும் இயக்கத்தை தொடக்கி வைத்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

டெல்லி : உலகில் பெரும் சவாலாக உள்ள பருவநிலை மாறுப்பாட்டை எதிர்க்கொள்ள மரம் நடுவதே ஒரே தீர்வு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  கூறியுள்ளார். புதுடெல்லியில் இன்று மரம் நடும் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும் சுற்றுசூழல் பூங்கா மற்றும் சுற்றுலா தளங்களுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டார். நாடு முழுவதும் பல்வேறு 10 மாநிலங்களிலும் உள்ள 38 மாவட்டங்களில் அடங்கிய 150 இடங்களில் காணொளி காட்சி மூலம் மரம் நடும் விழாவிற்கு மத்திய சுரங்கதுறை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, நாட்டில் 600 ஏக்கர் பரப்பளவில், 150 இடங்களில் 6லட்சம் மரங்கள் நட இந்த இயக்கத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் அதே வேளையில், சுற்றுசூழலையும் பராமரிக்க வேண்டும் என்றும் மரம் நடுதலை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நாட்டில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகவும் சுரங்கங்கள் அமைந்துள்ள மாநிலங்கள் மேம்பாட்டிற்காகவும் மத்திய அரசு ரூ.49 கோடி ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.


Tags : Amit Shah ,tree planting movement ,launch ,world , Weather, tree planting, solution, amitsha, talk
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...