×

திருப்பதியில் மனைவியை உதறிவிட்டு காதலி உடன் சென்ற கணவன்...! டாடி...டாடி...என குழந்தை கதறும் காட்சி காண்போரை கண்ணீரில் ஆழ்த்தியது!!!

திருப்பதி:  திருப்பதியில் குழந்தை நடத்திய பாசப்போராட்டத்தைக்கூட கண்டுகொள்ளாமல் காதலியுடன் தந்தை சென்றது காண்போரை கண்கலங்க வைத்திட்டுள்ளது.  சின்னகாப்பு வீதியை சேர்ந்த சரஸ்வதி, தக்காளி வியாபாரி வெங்கடாச்சலம் என்பவரை காதலித்து, 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியினர் பல ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், வெங்கடாச்சலம்-சரஸ்வதி இடையே ஒரு பெண் குறிக்கிட்டதால் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. அந்த பெண்ணுடன் தவறான உறவு வைத்துக்கொண்டு வெங்கடாச்சலம் குடும்பம் நடத்தி வந்தார். இதனால் காதலியும் கர்ப்பமானார். இதுகுறித்து காவல் நிலையத்தில் சரஸ்வதி புகார் அளித்துள்ளார். ஆனால் இதனை போலீசார் கண்டுகொள்ள வில்லை. இதனால், காவல் நிலையத்திற்கு வெளியே, காதலியுடன் கணவனை செல்லவிடாமல் மனைவி தடுத்துள்ளார். 8 வயது குழந்தையும் டாடி...டாடி...என கதறியது. ஆனால் இதனை கண்டுகொள்ளாத வெங்கடாச்சலம் இருசக்கர வாகனத்தில் காதலியுடன் சென்றுவிட்டார்.

மேலும், கணவன் கண்டுகொள்ளாமல் சென்றதால், சாலை என்றுகூட பாராமல், அங்கேயே அமர்ந்து கதறி கதறி சரஸ்வதியும் அவரது குழந்தையும் அழுதனர். தந்தை சென்றதால் நிலைகுலைந்த குழந்தை அப்பாவின் செல்போன் எண்ணை அழித்துவிடுமாறு கதறியது காண்போர் கண்ணீரில் ஆழ்த்தியது. அதன்பிறகும் போலீசார் மனம் இறங்காமல், மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று முறையிடும்படி கூறினர். இதனைத்தொடர்ந்து சரஸ்வதி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றும் முறையிட்டுள்ளார். ஆனாலும், டி.எஸ்.பி வந்தவுடன் வரும்படி போலீசார் அலைக்கழித்தனர். இதனால், தனக்கும், குழந்தைக்கும் நீதி வேண்டும் என்று சரஸ்வதி கண்ணீருடன் கூறியுள்ளார்.

Tags : Tirupati ,Daddy ,road , Man ,wife ,daughter, tirupati ,
× RELATED எனக்கு கொரோனா... தேடாதே... மனைவியை...