×

ஊட்டி லாரன்ஸ் பள்ளி சிறப்பு முகாமில் மருத்துவ உபகரணங்களை பிரித்து குரங்குகள் அட்டகாசம்: நோய் பரவும் அபாயம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்த 500க்கும் மேற்பட்டவர்களில் 250க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 250க்கும் மேற்பட்டோர் ஊட்டி அரசு மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை, குட்செபர்டு பள்ளி, லாரன்ஸ் பள்ளியில் உள்ள சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது.
இதில் லாரன்ஸ் பள்ளி சிறப்பு முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு ஆடைகள், மருத்துவ உபகரணங்கள் பொது வெளியில் கிடப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், அந்த உடைகள், மருத்துவ உபகரணங்களை சில குரங்குகள் பிரித்து போட்டு, ஏதோ எடுத்து உட்கொள்வது போன்று உள்ளது. இதனால் குரங்குகளுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இது போன்று பாதுகாப்பின்றி ஆடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வெளியில் போடுவதன் மூலம் இவைகளுக்கு பாதித்தால், அனைத்து கிராமங்களுக்கும் குரங்குகள் மூலம் பரவ வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகணரங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்கவும், புதைத்தோ அல்லது எரிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Tags : Ooty Lawrence School Special Camp Medical ,Ooty Lawrence School Special Camp , Ooty Lawrence School, Medical Equipment, Monkeys
× RELATED ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண்...