×

திருத்தணிகாசலம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? :மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருத்தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக அரசு வழக்கறிஞர் தகவல் அளித்துள்ளார். நீதிமன்றத்துக்கு அரசின் பதில் கிடைக்கப்பெறாததால் வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ அனுபவ அறிவு மட்டுமே கொண்ட திருத்தணிகாசலத்தை எப்படி மருத்துவராக ஏற்க முடியும்? முதலமைச்சர் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சிப்பது ஏற்புடையதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து கண்டுபிடித்ததாக கூறுவதற்கு நீதிபதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய திருத்தணிகாசலம் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை மாநகர போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. திருத்தணிகாசலம் மீது தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



Tags : Thiruthanikachalam ,Chennai High Court ,Government ,Central , thiruthanikachalam, kundar law
× RELATED நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை