×

கீழடி 6ம் கட்ட அகழாய்வு பணிகளில் தொல்லியல் துறை தீவிரம்!: மணலூர் உலைகலனில் தொடர்ச்சியை கண்டறிய முடிவு!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் 6ம் கட்ட அகழாய்வில் மணலூர் உலைகலனில் தொடர்ச்சியை கண்டறியும் பணிகளில் தொல்லியல்துறை ஆய்வாளர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மணலூரில் கடந்த மே - மாதம் 23ம் தேதி யோகலட்சுமி என்பவரது 2 ஏக்கர் நிலத்தில் அகழாய்வு பணிகள் தொடங்கின. மூன்று குழிகள் தோண்டப்பட்டு நடந்த அகழாய்வில், பானைகள், பானை ஓடுகள், உலைகலனின் ஒருபகுதி கண்டறியப்பட்டது.

செங்கல் கட்டுமானத்துடன் கூடிய, உலைகலனின் உள்ளே மண் பாத்திரங்கள் கிடைத்தன. தற்போது
உலைகலனின் மேற்குப்பகுதியில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியிலும் சிறிய உலைகலன் கண்டறியப்பட்டதால் அவற்றின் பயன்பாடுகளை கண்டறிய தொல்லியல்துறை முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதம் வரை மட்டுமே அகழாய்வு பணிகள் நடைபெறும் என்பதால் அதற்குள் உலைகலனில் முழுப்பகுதியை கண்டறியும் முயற்சியில் தொல்லியல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து ஒய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் தெரிவித்ததாவது, ஏற்கனவே இந்த பகுதியில் நடைபெற்ற அகழாய்வில், ஒன்றரை அடி விட்டத்துடன் வட்ட வடிவில்  உலை கலன் கிடைக்கப்பெற்றது. ஒற்றை செங்கற்களால் கட்டப்பட்ட இந்த உறைகலனானது, உலோகங்களை உருக்கி ஆபரணங்கள் செய்வது உள்ளிட்ட மற்ற பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. உலைகலன் கிடைத்திருப்பது மணலூர் தொழில்நகரமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது என தெரிவித்தார்.

Tags : Manalur , Archaeological Survey,Excavations ,Manalur ,
× RELATED கீழ்வேளூர் அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் 70 செம்மறி ஆடுகள் பலி