×

மயிலாடுதுறை அருகே கெயில் நிறுவன குழாயிலிருந்து பீறிட்டு வெளியேறிய காஸ்: 30 அடி உயரத்துக்குமேல் வந்ததால் மக்கள் அச்சம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மேமாத்தூர் கிராமத்தில் கெயில் நிறுவன குழாயிலிருந்து 30 அடி உயரத்துக்கு பீறிட்டு காஸ் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் பகுதியில் உள்ள மேமாத்தூர் கிராமத்தில் 20 வருடங்களுக்கு மேலாக கெயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனம், விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சீர்காழி தாலுகா மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக குழாய்களை விளை நிலங்கள் வழியாக பதித்து வருகிறது.

நேற்று, மேமாத்தூர் அருகே கெயில் நிறுவன ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று 30 அடி உயரத்துக்கு காஸ் புகைபோல் திடீரென வெளியேறியது. 2 மணி நேரம் ஊழியர்கள் போராடி காஸ் வெளியே வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து கெயில் நிறுவனத்தினர் கூறுகையில், ‘குழாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காற்று அழுத்தத்தின் காரணமாக புழுதியுடன் காற்றும், குழாயில் உள்ள தண்ணீர், மணலும் வெளியேறியது. இந்த குழாய் வழியாக எரிவாயு அனுப்பும் பணி இன்னும் துவங்கவில்லை. எனவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம’ என்று விளக்கமளித்தனர்.

Tags : Mayiladuthurai ,Gail , Mayiladuthurai, Gail Enterprise Tube, Exit Gas, 30 feet high, People fear
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...