கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் வனச்சரகத்தில் யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் சமீபகாலமாக விலங்குகள் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அதில் பணத்திற்காக ஈவு இரக்கமின்றி விலங்குகள் கொல்லப்படுகிறது. இத்தகைய சம்பவங்களுக்கு முன்மாதிரியாக யானைகள் அதிகளவில் துன்புறுத்தப்படுகிறது.
யானைகள் வேட்டையாடப்பட்டு, கொல்லப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கள்ளச்சந்தையில் யானைகளின் தந்தந்தங்கள் அதிகமான விற்பனையாவதே இதற்கு காரணமாகும். யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க அனைத்து ஆசிய நாடுகளும் கடுமையான சட்டங்களை பின்பற்றி வருகின்றன. இருப்பினும் யானைகள் கொல்லப்படும் குற்றங்கள் குறைந்தபாடில்லை
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் வனச்சரகத்தில் யானையை கொன்று தந்தம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த யானையை கொன்று தந்தத்தை உருவிச்சென்ற தம்மண்ணா என்பவரை போலீசார் கைது செய்தனர். பிலிக்கல் காட்டுப்பகுதியில் தற்காலிக வேட்டை தடுப்பு முகாம் அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.