×

ராஜஸ்தானில் கெலாட் - சச்சின் மோதல் முற்றுகிறது!: கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-வுக்கு சச்சின் பைலட் வக்கீல் நோட்டீஸ்..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாரதிய ஜனதாவுக்கு நேராக இழுக்க 35 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாக கூறப்பட்ட புகாரில், புகார் கூறியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சச்சின் பைலட் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காங்கிரஸ் அதிருப்தி தலைவரான சச்சின் பைலட், பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க முயல்கிறார் என்பது குற்றச்சாட்டு. முதலமைச்சர் அசோக் கெலாட் உடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சச்சினின் துணை முதலமைச்சர் பதவி மற்றும் கட்சியின் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

தற்போது தனது ஆதரவாளர்கள் 18 பேருடன், ஹரியானாவில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் சச்சின் பைலட் தங்கியுள்ளார். இந்த நிலையில் பாரதிய ஜனதா அணிக்கு செல்ல தனக்கு சச்சின் பைலட் 35 கோடி ரூபாய் தர முன்வந்தார் என்று அசோக் கெலாட் இடம் ஆதரவு எம்.எல்.ஏ ஆன கிரிராஜ் சிங் மலிங்கா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கடுமையாக மறுத்துள்ள சச்சின் பைலட், புகார் கூறிய எம்.எல்.ஏ. கிரிராஜுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனிடையே ஏற்கனவே சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதை எதிர்த்து சச்சின் தரப்பு தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் 24ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : clash ,Golad - Sachin ,Rajasthan ,Gehlot-Sachin ,MLA ,Sachin Pilot , Gehlot,Sachin , Rajasthan , Sachin Pilot lawyer ,
× RELATED கொல்கத்தாவில் மோதல்: ஓட்டல் உரிமையாளரை தாக்கிய நடிகர்