×

சிக்கலான அறுவை சிகிச்சை செய்ததால் பிறந்து 4 நாளே ஆன குழந்தைக்கு விமானம் மூலம் வரும் தாய்ப்பால்: தினமும் 1000 கிமீ தூரத்தில் இருந்து வருகிறது

புதுடெல்லி: கர்நாடாக மாநிலம், மைசூரில் வசித்து வரும் ஜிக்மெட் வாங்டஸின் மனைவி டோர்ஜி பால்மோ, லேவில் உள்ள சோனம் நூர்பூ மெமோரியல் மருத்துவமனையில் கடந்த ஜூன் 16ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. டோர்ஜி தற்போது லேவில் உள்ள தாய் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், டோர்ஜியிடம் இருந்து குழந்தையால் தாய்ப்பாலை உறிஞ்சி குடிக்க இயலவில்லை. இது பற்றி மைசூரில் உள்ள கணவருக்கு தெரிவித்தார். குழந்தையை பெரிய மருத்துவமனை சேர்க்க வாங்டஸ் முடிவு செய்தார். அவருடைய மைத்துனர் ஜிக்மத், லேவிலிருந்து விமானம் மூலம் கடந்த ஜூன் 18ம் தேதி காலை குழந்தையுடன் டெல்லி வந்தார். அங்குள்ள மாக்ஸ் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். குழந்தைக்க மூச்சுக்குழாயும், உணவுக்குழாயும் ஒன்றாக இணைந்து இருப்பதை கண்டுபிடித்த டாக்டர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, அப்பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.

எனினும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைக்கு தாய்ப்பால் தர வேண்டும் என வாங்டஸிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, லேவில் உள்ள தனது மனைவியிடம் இருந்து தாய்ப்பாலை பெற்று வந்து, குழந்தைக்கு புகட்ட வாங்டஸ் முடிவு செய்தார். டெல்லியில் உள்ள கொரோனா பரவல் அச்சம் காரணமாக மனைவியை டெல்லிக்கு அவர் அழைத்து வரவில்லை. தாய்ப்பால் கொண்டு வருவதற்காக தனியார் விமான நிறுவனத்திடம் பேசினார். அதன்படி, கடந்த ஒரு மாதமாக லேவில் உள்ள மனைவியிடம் தாய்பாலை பெற்று, அதை குப்பிகளில் அடைத்து பாதுகாப்பாக விமானம் மூலம் டெல்லி கொண்டு வந்து குழந்தைக்கு வழங்குகிறார். இதனால், குழந்தை நலமாக இருக்கிறது. லேவிலிருந்து டெல்லிக்கு ஆயிரம் கிமீ தூரம் உள்ளது. இதனால், தந்தையின் இந்த செயல், அனைவருக்கும் நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : breast-feeding ,baby , Complex surgery, birth, 4 days old, baby, plane, breastfeeding, 1000 km daily
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி