×

மெழுகுவர்த்தி, ஆட்சிக் கவிழ்ப்பு கொரோனா காலத்து சாதனைகள்: ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: ‘மக்களை மெழுகுவர்த்தி ஏந்த வைத்தது, மாநிலத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு இவைகளே கொரோனா காலத்தில் மோடி ஆட்சியின் சாதனைகள்,’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், கொரோனா காலத்தில் மோடி அரசின் சாதனைகள் என பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ‘‘கொரோனா காலத்தில் அரசின் சாதனைகள்: பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப், மார்ச் மத்திய பிரதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு, ஏப்ரல் மக்களை மெழுகுவர்த்தி ஏந்த விட்டது, மே அரசின் 6வது ஆண்டு விழா, ஜூன்  பீகாரில் டிஜிட்டல் பேரணி, ஜூலை ராஜஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு சதி. இதனால்தான் கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளது,’’ என கூறி உள்ளார்.

* டிவிட்டர் கட்சி பாஜ கிண்டல்
ராகுலுக்கு பதிலடி தந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நேற்று அளித்த பேட்டியில், ‘‘ராகுல் தினந்தோறும் டிவிட் செய்து வருகிறார். இதனால், விரைவிலேயே காங்கிரஸ் டிவிட்டர் கட்சியாகி விடும். எந்தவொரு மக்கள் பணியும் செய்யாமல் இருப்பதால், ஒவ்வொரு தலைவராக இழந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் விரக்தி அடைந்த மனஅழுத்தத்தில் உள்ள அக்கட்சி, அரசு மீது அனைத்து வகையான தாக்குதலையும் தொடுக்க முயற்சிக்கிறது’’ என்றார்.

Tags : Corona Achievements: Rahul Review ,Rahul Review ,Corona , Candle, coup, corona, achievements, Rahul review
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...