×

மாஸ்க் அணிந்தால் தான் சேவை: அஞ்சல் துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் உள்ள ஆதார் சேவை மையங்களில் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சேவை வழங்கப்படும் என அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் 1,435 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல், அஞ்சலகங்களில் உள்ள ஆதார் சேவை மையங்களில் கொரோனா பரவலை தடுக்க ஊழியர்கள் 50 சதவீதம் பேர் என சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இதனால், பொதுமக்களிடமும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அஞ்சலகங்களில் உள்ள ஆதார் சேவையை பயன்படுத்த வரும் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ஆதார் சேவையை கட்டாயம் வழங்கக்கூடாது எனவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற பகுதிகளுக்கு அருகில் அமைந்திருக்கும் கிளை அஞ்சலகங்களுக்கு வரும் மக்கள் பெரும்பாலானோர் முகக்கவசத்தை அணியாமலேயே வருகின்றனர். அவர்களுக்கு முகக்கவசத்தின் பயன்பாடு மற்றும் கொரோனா பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும் எனவும் எடுத்துரைத்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.

Tags : Mask, Service, Postal Department, Officer, Information
× RELATED சேவை மனப்பான்மையுடன் குறைந்த...