×

கந்தசஷ்டி குறித்து அவதூறு பதிவு விவகாரம் : கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கியது சைபர் கிரைம் போலீஸ்!!

சென்னை:கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது.

*கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சரஸ்வதி தேவி குறித்து மிகவும் இழிவாக பதிவிட்டு அசிங்கப்படுத்தியும், தமிழ் கடவுளான முருகக்கடவுள் குறித்தும், கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக பேசி வீடியோ வெளியானது.

*இதுகுறித்து பாஜ மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

*மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

*இதுதொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் (49) என்பவரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திர நடராஜன் புதுச்சேரி மாநில காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

*மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டேரி சோமசுந்தரம், மறைமலைநகர் குகன் ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தி.நகர் நியூ போக் சாலையில் உள்ள கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்தில்  சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

*அந்த யூடியூப் சேனல் நிறுவனத்தையும் மூடி சீல் வைத்தனர்.

*இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்யும்படி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதேநேரம் கறுப்பர் கூட்டம் சேனலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் பொதுமக்களிடையே பதற்றத்தையும் மதமோதல்கள் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதும் தெரியவந்தது.

*அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு ‘கறுப்பர் கூட்டம் சேனலை’ முடக்க கடிதம் எழுதினர்.

*இதனிடையே. இந்துக்கடவுள்களை இழிவு செய்யும் வகையில் கறுப்பர் கூட்டம் பதிவேற்றிய 500 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது.

*சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருந்ததால் யாரும் பார்க்க முடியாத வகையில், இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Cyber Crime , Kandasashti, slander, registration, black crowd, youtube, channel, 500, videos, deleted, cybercrime police
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...