×

சவுதி மன்னர் மருத்துவமனையில் அனுமதி

துபாய்: சவுதி மன்னர் சல்மான் பித்தப்பை வீக்கம் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு முதல் சவுதி மன்னராக சல்மான் பின் அப்துல்லா இருந்து வருகிறார். அவருக்கு வயது 84. சவுதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துலாசிஸ்க்கு பின்னர் ஆட்சியை நிர்வகித்து வந்த அவரது தலைமுறை சகோதரர்களின் கடைசி மன்னராக கருதப்படுபவர். இந்நிலையில், திடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து கிங் பைசல் மருத்துவமனையில் சல்மான் பின் அப்துல்லா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மன்னர் சல்மானுக்கு பித்தப்பை வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தனக்கு அடுத்த வாரிசாக மன்னர் சல்மான் ஏற்கனவே நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Saudi King's Hospital , King of Saudi Arabia, Hospital, Permission
× RELATED கட்டடத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது...