×

ஆடி அமாவாசை பலி தர்ப்பணம்; தடையை மீறி பழையாற்றில் குவிந்த மக்கள்

நாகர்கோவில்: முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் நடைபெறுகின்ற கன்னியாகுமரி கடற்கரை, குழித்துறை தாமிரபரணி ஆறு போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாகர்கோவில் பழையாற்றில் ஏராளமானோர் திரண்டு பலி தர்ப்பணம் செய்தனர். ஆடி அமாவாசை என்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்வது வழக்கம். குழித்துறை தாமிரபரணி ஆறு, கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களில் லட்சக்கணக்கில் திரண்டு வந்து தங்கள் முன்னோரை நினைத்து எள்ளையும், நீரையும் வாரி இறைத்து பலி தர்ப்பணம் செய்வர்.

இதற்காக வேத விற்பன்னர்கள் முதல்நாளே வந்து குவிந்து விடுவர். பலி தர்ப்பணத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். மேலும் நாகர்கோவில் பழையாறு, கணபதிபுரம் அருகே உள்ள ஆயிரங்கால் பொழிமுகம் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் பலி தர்ப்பண நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் திரளுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் 5 பேருக்கு மேல் கூடுதல் கூடாது என்று 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மேலும் கன்னியாகுமரி கடற்கரை, குழித்துறை தாமிரபரணி ஆறு போன்ற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் செல்லவில்லை. இந்தநிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகே உள்ள ஆறு குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பலி தர்ப்பணம் செய்தனர்.

நாகர்கோவில் அருகே உள்ள பழையாற்றின் கரை பகுதியில் ஏராளமானோர் திரண்டு பலி தர்ப்பணம் செய்தனர். வடசேரி, கோதைகிராமம், தத்தையார்குளம், திருப்பதிசாரம் ஜடாயுபுரம் உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு பலி தர்ப்பண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதிகாலையில் திரண்ட மக்கள் தங்கள் முன்னோருக்கு பலி தர்ப்பணம் செய்தனர். புரோகிதர்களும் பலரும் அங்கு வருகை தந்து மந்திரங்களை ஓதி பலிதர்ப்பணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அவர்கள் பழையாற்றில் புனித நீராடினர்.

Tags : moon ,Audi ,river , Audi New Moon, Sacrifice Prohibition, Prohibition
× RELATED தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில்...