×

இமாச்சலப்பிரதேசத்தில் 2வது நாளாக தொடர் கனமழை...! பல்வேறு இடங்களில் திடீர் மண்சரிவு ஏற்பட்டதால் மக்கள் அவதி!!!

இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக இடைவிடாது கொட்டும் கனமழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பிபல்கோட்டி, சமோலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழையின் காரணமாக திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதில் வசித்த மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், இதேபோல் பகிரிநாத் தேசிய நெடுஞ்சாலை அருகே ஏற்பட்ட மண் சரிவில் பலர் சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, மண் சரிவில் சிக்கியவர்களை மீட்க, தேசிய மற்றும் தேசிய மீட்புப்படை வீரர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். மேலும், இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை நீடிக்கும் என்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 67 மி.மீ மழை பெய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, 23ம் தேதிக்கு பிறகு இமாச்சலப்பிரதேசத்தில் மழை குறைய வாய்ப்புள்ளதாக சிம்லா வானிலை ஆய்வு மைய இயக்குனர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.


Tags : Himachal Pradesh ,places ,landslides , Himachal Pradesh, heavy rains, landslides
× RELATED ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் கங்கனா ரானாவத் வேட்பு மனு தாக்கல்