×

எய்ம்ஸ் சார்பில் இ-ஐசியு எனப்படும் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை

டெல்லி: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ் சார்பில் இ-ஐசியு எனப்படும் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை அமர்வுகளை நடத்தி வருகிறது. இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று இந்த விகிதம் 2.46 விழுக்காடு ஆகும்.

திறமையான சிகிச்சை முறையினாலும், நிர்ணயிக்கப்பட்ட கவனிப்பு நெறிமுறைகளை சரியாக செயல்படுத்துவதாலும், நடுத்தர பாதிப்பு மற்றும் மிக மோசமான பாதிப்புக்குள்ளானவர்கள் கூட குணமடைகிறார்கள். கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இ-ஐசியு என்ற காணொலி காட்சி மருத்துவ ஆலோசனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இறப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கத்துடன், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), இ-ஐசியு எனப்படும் காணொலி காட்சி மருத்துவ ஆலோசனை அமர்வுகளை நடத்தி வருகிறது.

இதில் 11 மாநிலங்களில் உள்ள 43 பெரிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், கொவிட்-19 நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதில் தமக்குள்ள அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, மருத்துவ நிபுணர்களிடமிருந்து தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெறுகின்றனர். இதனால் அபாயக் கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கணிசமாகக் கூடியுள்ளது.



Tags : AIIMS ,video conferencing ,Corona , AIIMS, Corona
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...