×

கொரோனா பரவல்: விழுப்புரம் அருகே ஐசிஐசிஐ வங்கி கிளை மூடல்

விழுப்புரம்: விழுப்புரம் சிக்னல் அருகே உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளை மூடப்பட்டது. வங்கி மேலாளர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதித்ததை அடுத்து வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

பணியிடங்களில் ஊழியர்கள் இரண்டு மீட்டர் இடைவெளியை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்பது குறித்து உலகில் பல நாடுகளில் விவாதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை அலுவலகங்களில் பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என பலர் நம்புகின்றனர்.

அதே நேரம், மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது எப்போதும் சாத்தியமில்லை என்பதால், முடக்கநிலைக்குப் பிறகு பணியிடங்களுக்கு திரும்பி செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டியது அவசியமில்லை என அலுவலகங்கள் முடிவுசெய்தால் தினசரி வாழ்க்கை எளிதாக இருக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பு உள்ளவர்களிடம் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தால் வைரஸ் தொற்று உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.

விழுப்புரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,212 ஆக உயர்ந்துள்ளது. 781 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 1,70,693 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,07,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 2,481 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.



Tags : ICICI Bank ,Corona ,Villupuram ,branch closure , Corona, Villupuram, ICICI, Bank
× RELATED இறங்குமுகம் காணும் பங்குச்சந்தை...