×

வாகனம் வராததால் மயங்கி விழுந்து மரணம்...வீதியிலேயே கேட்பாரற்று கிடந்த சடலம்: ஆந்திராவில் கொரோனா நோயாளியின் கதி!

குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனம் வராததால் வீதியில் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். குண்டூர் மாவட்டம் சத்திரப்பள்ளியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனம் அனுப்பி வைப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அனால் வெகு நேரமாகியும் வாகனம் வராததால் போன் செய்து விசாரித்துள்ளனர். வாகனம் வர சிறிது நேரம் ஆகும் என்று தெரிவித்த அவர்கள், அவசரமென்றால் ஆட்டோ பிடித்து வருமாறு தெரிவித்துள்ளனர்.

அவரது குடுமபத்தினர் ஆட்டோவில் அழைத்து செல்ல முயன்றபோது தடுமாறியதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர், கொரோனா நோயாளியை ஆட்டோவில் ஏற்ற மறுத்து சென்றுவிட்டார். இதனால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்த நோயாளி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து அதே இடத்தில் இறந்துவிட்டார். வீதியில் இறந்து கிடந்த வராது உடல் அருகே உறவினர்கள் உள்ளிட்ட யாரும் அருகில் வராததால் சுமார் 2 மணி நேரம் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. இதையடுத்து, உயரதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : road ,patient ,Andhra Pradesh ,Corona ,Guntur , COVID-19,patient,die,Andhra,Guntur
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி