×

சத்தியபாமாவின் ஆட்தேர்வு மைல்கல்

சத்தியபாமாவின் வளாக ஆட்தேர்வு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் பதித்துள்ளது. இறுதியாண்டு பி.டெக்-தகவல் தொழில்நுட்பம் மாணவர் ஆதர்ஷ் ஆண்டுக்கு 41 லட்சம் ரூபாய் சம்பளத்தில் திவேர்டா நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை சத்தியபாமா மாணவர்கள் பெற்றதிலேயே இதுதான் உயர்ந்தபட்ச அளவாகும். பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் டாக்டர் மரிய ஜான்சன் மாணவரை பாராட்டி ஊக்கப்படுத்தினர். சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 90 சதவீதத்திற்கு மேலான மாணவர்கள் இதுவரை (15.7.20 தேதிப்படி) 231 நிறுவனங்களால் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டுள்ள ஒரு மிகவும் அழுத்தமான சாதனை பதிவை பராமரித்து வருகிறது. இன்னும் வாய்ப்புகளை வழங்கும் பல ஆட்தேர்வர்கள் உள்ளனர். மீதி மாணவர்களையும் பணியமர்த்துவதில் பயிற்சி நிலையம் உறுதியாக உள்ளது.


பதினைந்து சதவீதத்திற்கு மேலான மாணவர்கள் ஆண்டுக்கு 5.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வழங்கும் தாங்கள் கனவு கண்ட நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்குவோர் எண்ணிக்கை அதிகம் உயர்ந்திருக்கிறது. அதிகளவு மாணவர்கள் முக்கிய உன்னத தொழிற்நுட்பங்களில் நிபுணர்களாக விளங்குவதே அதிக சம்பளம் வழங்கும் நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் வாய்ப்பினை அளிக்கிறது. அமேசான், ஏடிபி, காக்னிஸன்ட், கேப்ஜெமினி, டிஎக்ஸ்சி, என்ஸ்ட் & யங், எச்சிஎல், எச்பி, ஹுண்டாய் இன்மொபிஸ், மைண்ட்டிரீ, என்டிடி டேடா, ஆரக்கிள், ரெனால்ட் நிஸான், சீமன்ஸ், வெரிஸோன், விப்ரோஆகியவை தொடர்ந்து சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் பிரபல ஆட்தேர்வு செய்யும் நிறுவனங்களாகும்.

Tags : Satyabhama , Satyabhama, selection, milestone
× RELATED கருணை பொங்கும் கிருஷ்ணத் தலங்கள்