×

ஆபிஸ், மால்களில் நோயாளியை கண்டறிய கமகம வாசனை அட்டை: ஆராய்ச்சியாளர்கள் புது டெக்னிக்

கொரோனா பாதித்த நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர்,  வாசனையை நுகர்ந்து கண்டறியும் சக்தியை 80 சதவீதம் இழக்கின்றனர்.

நியூடெல்லி: அலுவலகம், மால்களுக்கு வரும் நபர்களில் கொரோனா நோயாளியை கண்டறிய வாசனை அட்டையை பயன்படுத்தும்படி  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அலுவலகங்கள், பெரிய மால்கள், இதர வணிக நிறுவனகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளியில் இருந்து வரும் நபர்களை உள்ளே அனுமதிக்கும் முன், கொரோனா அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல் இருந்தால் மட்டுமே இது காட்டிக் கொடுக்கும். தற்போது காய்ச்சல் இன்றி கொரோனா தொற்று ஏற்பட்ட வர்களும்  உள்ளனர். இவர்களை இந்த கருவியால் கண்டுபிடிக்க முடியாது.  

அதனால், வேறு யுக்தியின்மூலம் இது போன்றவர்களை  கண்டறியும் ஆய்வுகளை அமெரிக்கா, இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்தி வருகின்றனர்.  அதில், கொரோனா தொற்று உள்ளவர்களில் 50% பேர், வாசனை சக்தி 80%  இழந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். அதனால், மால்கள், அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரும் நபர்களுக்கு  இந்த  வாசனை நுகர்வு சோதனையை நடத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள்  பரிந்துரை செய்துள்ளனர்.  இதற்காக,  பல்வேறு வகையான  கமகம நறுமணங்களை கொண்ட வாசனை அட்டைகளை பயன்படுத்தலாம் என அவர்கள் கூறியுள்ளனர். அதனால், இனிமேல் இந்த இடங்களின் வாசலில் ்தெர்மல் ஸ்கேனருடன், வாசனை அட்டையும் வாசலில் இருக்கும். சரிதானே...

Tags : patient ,offices ,Kamagama ,Researchers ,malls , Office, Malls, Corona Patient, Researchers, Technique
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...