×

விஸ்வரூபம் எடுக்கும் தங்கம் கடத்தல் விவகாரம்: கேரள அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: எதிர்கட்சியினர் முடிவு: சபாநாயகருக்கும் சிக்கல்

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கேரள அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சியினர் தீர்மானித்துள்ளனர். இதனால் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. தங்கம் கடத்தல் வழக்கு கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டும் பினராய் விஜயன் மீது குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் கேரள சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சர்வதேச தொடர்புள்ள தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வரின் முதன்மை செயலாளருக்கு தொடர்பு இருந்தால் அதற்கு முதல்வரும் பொறுப்பு ஏற்கவேண்டும்.

ஐடி துறையை ஒரு தங்க சுரங்கமாக முதல்வரும் அவரது அலுவலகமும் கருதுகின்றனர். கேரள அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது. எனவே முதல்வர் பினராய் விஜயன் பதவி விலகவேண்டும். வரும் 27ம் தேதி கேரள சட்டசபை கூட உள்ளது. அப்போது அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தீர்மானித்துள்ேளாம். சிவசங்கர் குறித்து தலைமை செயலாளர் விசாரணை நடத்துவதால் எந்த பலனும் இல்லை. இது குறித்து சிபிஐ விசாரிக்கவேண்டும்’’ என்றார். இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏ சதீசன் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த நோட்டீசை சட்டசபை செயலாளர் உண்ணிகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள சொப்னா மற்றும் சந்தீப்நாயர் இணைந்து துவங்கிய கார்  ஒர்க்‌ஷாப்பை கேரள சபாநாயகர்  ராமகிருஷ்ணன் திறந்து வைத்த சம்பவமும் பரபரப்பாகி உள்ளது. இது சொப்னாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும்  இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில்  சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய கோரி காங்கிரஸ் எம்எல்ஏ உம்மர்  கேரள சட்டசபை செயலாளருக்கு நோட்டீஸ்  கொடுத்துள்ளார். கேரள சட்டசபை வரும்  27ம் தேதி கூடும்போது  சபாநாயகரை தகுதி நீக்கம் செய்ய கோரி தீர்மானம்  கொண்டு வரவும்  எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் சபாநாயகர்  

ராமகிருஷ்ணனுக்கும்  நெருக்கடி முற்றி உள்ளது. கட்சிக்குள்ளும் நெருக்கடி: இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ‘தங்கம் கடத்தல் வழக்கால் கட்சியின் செல்வாக்கு சரிந்து வருகிறது. இதற்கு பினராய் தான் முக்கிய காரணம். எனவே ெபாதுமக்களிடம் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கூட்டங்கள் நடத்தவேண்டும். வீடு வீடாக சென்று சம்பவம் குறித்து விளக்கவேண்டும்’ என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சிவசங்கர் சஸ்பெண்ட் ஏன்?
தங்கம் கடத்தல் விவகாரத்தில் சொப்னாவுடன்  சிவசங்கருக்கு நேரடி தொடர்பு இருப்பது தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையில், சிவசங்கருக்கு எதிராக பல  குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதையடுத்துதான்  சிவசங்கரை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் பினராய் விஜயன் தீர்மானித்தார்.  சஸ்பெண்ட் செய்வதற்கு முன்பு கைது செய்யப்பட்டால் அரசுக்கு அவமானம்  ஏற்படும் என்பதால் உடனடி நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிவசங்கர் தலையீட்டால் தான் சொப்னா ஐடி துறையில் நியமிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சொப்னா தவிர மேலும் பலரை தனது நேரடி சிபாரிசில் சிவசங்கர் நியமித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

என்ஐஏ கஸ்டடியில் சரித்குமார்
வழக்கில் முதல் குற்றவாளியான சரித்குமாரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரித்த பின்னர் நேற்று கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சரித்குமாரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அனுமதி கோரியது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து சரித்திடம் என்ஐஏ விசாரணை தொடங்கியுள்ளது. சொப்னா மற்றும் சந்தீப் உடன் சரித்தையும் ஒன்றாக வைத்து விசாரிக்க என்ஐஏ தீர்மானித்துள்ளது. மூவரையும் ஒன்றாக விசாரித்தால் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று என்ஐஏ கருதுகிறது.

துணை தூதரின் பாதுகாவலர் தற்கொலை முயற்சி
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய  அரபு  அமீரக தூதரக துணைத்தூதர் பொறுப்பில்   இருக்கும் ராஷித் அல் சலாமியின் பெயரில்தான் தங்கம் பார்சல் வந்தது. இந்த  நிலையில் திடீரென அவர் துபாய்க்கு  சென்றுள்ளார். அவருக்கு, திருவனந்தபுரம் ஆயுதப்படை காவலர் ஜெயகோஷ் மெய்க்காப்பாளராக இருந்து வந்தார். ஜெயகோஷிடமும் சொப்னா பலமுறை பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெய்கோஷ் திடீரென மாயமானார். இந்நிலையில் நேற்று மதியம் இவரது வீட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் முட்புதரில் ஜெயகோஷ் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது கை நரம்பு அறுந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயகோஷ் அவரது கை நரம்பை அறுத்து தற்ெகாலைக்கு முயன்றதாக ேபாலீசார் தெரிவித்தனர். ஜெயகோஷிற்கு பாதுகாப்பை அதிகரிக்க டிஜிபி லோக்நாத் ெபக்ரா உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு 7.30க்கு அவரது நண்பரும் முன்னாள் ஐபி அதிகாரியுமான நாகராஜ் என்பவரிடம் பேசியதும் அதன் பின்னர் அவர் தலைமறைவானதும் தெரிய வந்தது. இதையடுத்து நாகராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து நாகராஜ் கூறியதாவது: நானும் ஜெயகோஷும் நண்பர்கள். எனக்கு சொப்னாவை தெரியாது. ஆனால் சரித்குமாரை தெரியும். கடத்தல் கும்பலுடன் எனக்கோ ஜெயகோஷிற்கோ தொடர்பு இல்லை. கடத்தல் சம்பவம் வெளியான பின்னர் ஜெயகோஷிற்கு மிரட்டல்கள் வந்ததாக அவர் என்னிடம் கூறினார். தன்னை யாராவது கொல்வார்கள் என்று அவர் பயந்தார்.  கடத்தல் வழக்கில் தன்னையும் சிக்க வைப்பார்களோ என்று ெஜயகோஷ் பயந்தார். இவ்வாறு கூறினார்.



Tags : government ,Kerala ,Speaker ,Opposition , Gold smuggling, Kerala, Speaker
× RELATED சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு...