×

வீர மரணமடைந்த தமிழக வீரர் மதியழகனின் மனைவி தமிழரசிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கிய முதல்வர் பழனிசாமி..!!

சேலம்: ஜம்மு-காஷ்மீரில் வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் மனைவி தமிழரசிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மதியழகன் கடந்த ஜூன் 4-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து பணியில் இருந்த போது மரணமடைந்த மதியழகனின் மனைவி தமிழரசிக்கு அரசுப்பணி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்திய ராணுவத்தின் 17- வது மெட்ராஸ் படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்த, சேலம் மாவட்டம் வெத்தலைக்காரன் காடு கிராமத்தைச் சேர்ந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் என்பவர், ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிரியின் போர் தாக்குதலால்கடந்த ஜூன் 4ம் தேதி அன்று வீர மரணம் அடைந்தார்.

வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து வந்தனர். மேலும் மதியழகனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் அவரது மனைவிக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவில்தார் மதியழகன் அவர்களின் மனைவி தமிழரசிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கியுள்ளார்.

Tags : Mathiyalakan ,Palanisamy ,Tamil Nadu , Heroic death, Tamil Nadu player, Mathiyalakan, wife Tamilarasi, government job, Chief Minister Palanisamy
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...