×

பிளாஸ்மா தானம் செய்ய வெளிமாநிலங்களில் இருந்து வருவோர்களின் விமான பயணம் மற்றும் தங்கும் செலவுகளை அரசே ஏற்கும் : அசாம் அரசு அறிவிப்பு!!!

கவுகாத்தி : அசாமுக்கு வெளி மாநிலங்களில் இருந்து பிளாஸ்மா தானம் செய்ய தயாராக உள்ளவர்களுக்கு மாநில விருந்தினர் வசதிகள் வழங்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை சிறந்த பலனை தந்து வருவது மருத்துவரீதியாக நிரூபணமாகி வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மாவை, நோய்த்தொற்று ஆளான மற்றொருவருக்கு செலுத்தி அவரையும் குணப்படுத்தும் சிகிச்சை முறை பிளாஸ்மா தெரபி எனப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், பிளாஸ்மாதெரபி சிகிச்சையை மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால், அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், பிளாஸ்மா தானத்தை பொறுத்த வரையில், ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளோம். கோவிட் -19-இல் இருந்து மீண்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டு மனிதகுலத்தை காப்பாற்ற முடியும். பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் இன்னும் பிளாஸ்மா வங்கி இல்லை. அசாமு மாநிலத்துக்கு வெளியிலும் பிரச்சாரம் செய்து, மக்கள் தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.அசாமுக்கு வெளியில் இருந்து பிளாஸ்மா தானம் செய்ய தயாராக உள்ளவர்களுக்கு மாநில விருந்தினர் வசதிகள் வழங்கப்படும் என்றும், அஸ்ஸாம் அரசாங்கம் அவர்களின் தங்கும் செலவு,விமான பயண செலவுகளை இரு வழிகளிலும் ஏற்கும். மக்கள் முன்வருவார்கள் என்று அரசாங்கம் நம்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Tags : government ,announcement ,Assam ,stay ,donors ,state ,plasma donation campaign , Corona, Plasma, Donation, Government Service, Priority, Granted, Assam, Government, Announcement
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...