கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு!!!

கர்நாடகா:  கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை என்பது கடந்த மாதம் முதல் தொடங்கியுள்ளது. இதனால், கர்நாடக மாநிலத்தில் தற்போதுதான், பருவமழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 11 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. மேலும், குடகு மாவட்டத்தில் உள்ள ஹேரங்கி அணை நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே உள்ளது. இந்நிலையில், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இரு அணைகளிலிருந்தும் வினாடிக்கு மொத்தம் 5 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்திற்கு 2 ஆயிரம் கனஅடி அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது கர்நாடக அணைகள் மேலும் நிரம்பி வருவதால் தண்ணீர் திறந்துவிடும் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அணைகளுக்கு நீர் வரத்தை பொறுத்து, தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: