×

தாளூர் சோதனைச்சாவடியில் தண்ணீர் வசதியின்றி அவதி

பந்தலூர்: பந்தலூர் அருகே கேரளா தமிழக எலைப்பகுதியில் தாளூர் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் காவல்துறை, வனத்துறை, வருவாய்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், தற்போது கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக சுகாதாரத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணியில் இருப்வர்களுக்கு கழிப்பறை பயன்பாடு மற்றும் குளிப்பதற்கு, சமையல் போன்றவை செய்வதற்கும் தண்ணீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

 இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு அருகே இருக்கும் தனியார் கழிப்பறைகளுக்கு சென்று வருகின்றனர். அதனால் பணியில் இருப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சோதனைச்சாவடி அருகே இருக்கும் பஞ்சாயத்து கிணறு பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் கிணற்று தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறையினர் மற்றும் சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் சோதனைச்சாவடிக்கு போதிய தண்ணீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : Thalur , Thalur, check post, water
× RELATED 3 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி...