×

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது

சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கறுப்பர் கூட்டம் என்ற You Tube சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இது குறித்து சென்னை மத்தியகுற்றப்பிரிவில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருகின்றனர்.

Tags : Kanda Sashti , Kanda Sashti armor, one arrested
× RELATED திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா...