×

போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!!

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடைக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தொடர்பான உயர்நீதிமன்ற கருத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எந்த அவசரமும் காட்டவில்லை.போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் சொத்துக்களை கையகப்படுத்தவே அவசர சட்டம் பிறப்பித்தோம். நிலம் கையகப்படுத்தும் நடைமுறையில் இறுதி முடிவு எடுக்கவில்லை, என்றார். இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


Tags : Chennai High Court ,house ,Vedha House ,Boise Garden , Boise Garden, Vedha House, Memorial House, Ban, Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...