×

கோவையில் கொரோனா அச்சத்தால் இறக்குமதி தடை: சிறு, குறு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை!!!

கோவை:  கோவையில் கொரோனா முடக்கத்தால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய சிறு, குறு தொழில் நிறுவனங்களில் மிக பெரிய நிறுவனங்கள் இயங்கக்கூடிய இடம் கோவை மாவட்டம் தான். கோவை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் சுமார் 10 லட்சம் பேர் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது, போர் மோட்டார் இயந்திரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் இயந்திரம், கிரைண்டர் உள்ளிட்ட பல உற்பத்தியை கையாளும் மிகப்பெரிய அளவிலான நிறுவனங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 6 மாத காலமாகவே சிறு, குறு தொழில்கள் முடங்கிய நிலையில் உள்ளன. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும், நிறுவனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மூலப்பொருட்கள் வருவதில் சிக்கல் நிலவுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இருப்பினும் சில இயந்திரங்களை தயார் செய்தாலும் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, வியாபாரிகள் தெரிவிப்பதாவது, மாவட்டம் வாரியாக அல்லது மாநிலம் வாரியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அங்கிருந்து மூலப்பொருட்கள் வருவதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும், நிறுவனத்தில் பணிபுரிந்த வடமாநில பணியாளர்கள் அனைவரும் கொரோனா அச்சத்தால் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

இதனால் இயந்திரங்களை தயார் செய்வதில் பணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டாலும் அவற்றை சந்தையில் விற்பனை செய்வதில் சிக்கல் நிலவுவதாக அவர் கூறியுள்ளார். இதனால், கோவையில் சிறு, குறு தொழில்கள் மிகவும் மோசமான நிலையில், உள்ளதாகவும், தொழிலாளர்கள் அனைவரும் தனது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : Traders ,Coimbatore ,businesses , Import ,ban , corona, Coimbatore, Small, micro businesses
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்