×

நிதி நிறுவனங்கள், வங்கிகள் கட்டாய கடன் வசூல்..! நெருக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?..நிபுணர்கள் விளக்கம்!!!

சென்னை: மத்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சிறிதளவும் மதிக்காத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல், அடாவடி தனத்தை தவிர்க்க வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள வேண்டியது என்ன? வங்கிகளின் நெருக்கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். கடனை கட்ட முடியாமல் விவசாயி தற்கொலை, மாத தவணையை திருப்பி செலுத்த முடியாமல் இளைஞர் மரணம், நிதி நிறுவனங்களின் நெருக்கடியால் குடும்பமே தற்கொலை போன்ற மரணங்கள் அன்றாட வாடிக்கையாக மாறிவிட்டன.

இதற்கு காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களே மிக கோரமான கொடும் கரங்கள் ஒருபுறம் இருக்க, வாடிக்கையாளர்களின் அறியாமையும், அச்சமும் பரிதாபகரமான முடிவுகளுக்கு பெரும் காரணமாகவே இருக்கின்றன. தற்போதைய கொரோனா பேரிடர் காலத்திலும் பொதுமக்கள் மத்தியில் நிலவும், பெரும் பொருளாதார பின்விளைவையும் கருத்தில் கொண்டு கடன்பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்புகளை இமியளவும் மதிக்காத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் முகவர்கள் வசூல், அடாவடி தனத்தை தொடர்ந்து கட்டமிட்டு வருவது அன்றாட புகாராக இருக்கிறது.

கடன்பெற்ற வாடிக்கையாளர்கள் வங்கிகளின் நெருக்கடிக்கு ஆளானால் சட்டரீதியாக செய்ய வேண்டியது என்ன என்பதை சைபர் கிராம் நிபுணர் கார்த்திகேயன் விளக்குகிறார். வீட்டிற்கு வந்து யாராவது மிரட்டினால் பயப்படாமல் போலீசார் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். வரம்பு மீறும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் சார்ந்த அணுகுமுறையே பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களின் பிரச்சனைக்கு தீர்வாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தவிர, பயம், பதற்றம், தற்கொலை என்பது ஒருபோதும் தீர்வாகாது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

Tags : institutions ,crisis ,Experts , Financial institutions, Banks, Debt collection, Consultants
× RELATED திரும்பி செல்ல முடியாமல் தவிக்கும்...