×

சிங்கம்புணரியில் ஊருணியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: சுகாதாரக்கேடு அபாயம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பள்ளங்குண்டு ஊரணியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. சிங்கம்புணரி திருப்பத்தூர் சாலையில் உள்ள பள்ளங்குண்டு ஊருணி குடிதண்ணீர் ஊரணியாக இருந்தது. காலப்போக்கில் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக ஊருணி இருந்த இடம் தெரியாமல் போனது. இதையடுத்து கடந்த ஆண்டு கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் தூர்ந்து போன ஊருணியை மீண்டும் தூர்வாரும் பணி நடைபெற்றது. ஆக்கிமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தூர்வாரும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்த ஊருணி நடுவில் கூத்தாடி அம்மன் கோயில் தெரு, நாடார்பேட்டை பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய் சென்றது. ஊருணியை தூர்வாரும் போது கால்வாய் சேதமடைந்தது. இதனால் கழிவு நீர் வெளியே செல்ல முடியாததால் ஊருணியிலேயே தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு  வருகிறது. இப்பகுதி மக்கள் கொசுக்கடியால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஊருணியை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Singapore , Cinkampunari, sewerage, sanitation , hygiene
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...