×

சேலம், நாமக்கல், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: சேலம், நாமக்கல், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும், புதுவை காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரும்பாலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். நாளை(10.07.2020) உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில், மதுரை தெற்கு பகுதியில் 8 செ.மீ  மழையும், காரையூரில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், வேலூறில் 6 செ.மீ, இடையப்பட்டி, நாட்றம்பள்ளி, மதுரை தானியங்கி மழைமானி பகுதிகளில் தலா தி  செ.மீ, பெனுகொண்டாபுரம், சிட்டாம்பட்டி பகுதிகளில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், ஆலங்காயம், போளூர், தளி, மேலாளத்தூர், ஆம்பூர், கொடைக்கானல், ஓமலூர், போச்சம்பள்ளி, காவேரிப்பாக்கம் பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூலை 9ம்(இன்று) தேதி, வடக்கு குஜராத் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 9 முதல் 12ம் தேதி வரை, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 1 மற்றும் 12ம் தேதிகளில் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சோறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், குஜராத் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  ஜூலை 9 முதல் 13ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கணட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Thundershowers ,districts ,Namakkal ,Salem ,Theni Thundershowers ,Theni , Tamil Nadu, Pondicherry, rain, Chennai Weather Center
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...