புல்வாமா தாக்குதலுக்கு உதவியவர் கைது

ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் சிஆர்பிஎப் வீரர்கள் கான்வாய் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புல்வாமா மாவட்டம், காக்போரா பகுதியை சேர்ந்த பிலால் அகமது என்பவரை என்ஐஏ கைது செய்துள்ளது. இவர் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதற்கு உதவியது, மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுடன் தொடர்பு கொள்வதற்கு செல்போன் கொடுத்து உதவியுள்ளார்.

Related Stories:

>