×

ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பயங்கர தீ

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை சேத்தூர் வனப்பகுதி உள்ளது. இங்குள்ள பிலாவடியான் பீட் பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சுமார் 10 கி.மீ தூரத்திற்கு அது பரவியது. தகவலறிந்த 12 தீத்தடுப்பு வனத்துறை காவலர்கள், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அரியவகை மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டதா அல்லது வெயிலின் தாக்கத்தால் தீப்பிடித்ததா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Western Ghats ,Rajapalayam Rajapalayam , Rajapalayam, the Western Ghats, a Great Fire
× RELATED மேற்குத்தொடர்ச்சியில் கனமழை; சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு