×

முழு ஊரடங்கை மீறிய 1,564 பேர் மீது வழக்கு: 1,052 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் நேற்று வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேநேரம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனை கண்காணிக்க சென்னை முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், தடையை மீறி வெளியே சுற்றியதாக 1,564 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,052 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர வாகனங்களில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் வந்தாக 683 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Tags : persons , Full curfew, 1,564 violations, prosecution, 1,052 vehicles seized
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...