×

பொருளாதார பட்டுப்பாதை திட்டம் நிறைவேற்றப்படும்: பாக். பிரதமர் இம்ரான் உறுதி

இஸ்லாமாபாத்: சீனா பாகிஸ்தான் பொருளாதார பட்டுப்பாதை வழித்தடத்தை பாகிஸ்தான் எப்படியாவது நிறைவேற்றும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பலுசிஸ்தான் மாகாணத்தின் கவதார் துறைமுகம் சீனாவின் ஜின்ஜியாங்ங் மாகாணத்துடன் இணைக்கப்பட உள்ளது. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதால் இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  ஆனால் தற்போது கொரோனா பாதிப்பினால் இத்திட்டத்தின் பெரும்பாலான பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பொருளாதார முடக்கத்தில் இருந்து மீள இத்திட்டத்தை விரைந்து முடிக்கும்படி கேட்டு கொண்டார். இதையடுத்து, இது தொடர்பாக நேற்று இஸ்லாமாபாத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் இம்ரான்கான் பேசிய போது, ``பாகிஸ்தான்-சீனா இடையிலான நட்பின் அடையாளம் இந்த வழித்தடம். இத்திட்டத்தை அரசு எப்படியாவது நிறைவேற்றும். இதன் பலன் ஒவ்வொரு பாகிஸ்தானியரையும் சென்றடையும். பன்முக தன்மை கொண்ட இத்திட்டத்தின் மூலம் பாகிஸ்தானின் சமூக பொருளாதார மேம்பாடு உயரும். நிறுத்தப்பட்டுள்ள இத்திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.’’ என்று கூறினார்.



Tags : Imran ,Pak , Economic Silk Road Project, Prime Minister of Pakistan Imran
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு