×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் பேட்டி

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ்(31). இவர்கள் இருவரும் கடந்த 19ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, 20-ம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நலக்குறைவால் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 22ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ், 23ம் தேதி அதிகாலை ஜெயராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ்  ஆகிய 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சிபிசிஐடி ஐஜி சங்கர், சாத்தான்குளம் சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தடயங்கள், ஆவணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். அழிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம், என கூறியுள்ளார்.

Tags : IG Shankar ,Father and Son Murder Case Interview , Sathankulam, father-son murder, police, CBCID IG Shankar
× RELATED சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு...