×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம் மட்டும் விருதுநகர் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்க்கூடும்.அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்கள், கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கரூர், தர்மபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை ஆயுத 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அருப்புக்கோட்டையில்  4 செ.மீ மழையும், அயனாவரம், பெரம்பூர் பகுதிகளில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், வால்பாறை தாலுகா அலுவலகம், சின்னக்கல்லார், சோலையார், இரையூர், மேட்டூர் பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும், தேவலா, அவலாஞ்சி, பல்லிப்பட்டு பகுதிகளில் தல 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூலை 2(இன்று) முதல் ஜூலை 3 வரை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், ஜூலை 2 முதல் ஜூலை 6 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Thunderstorms ,Tamil Nadu ,New Delhi Thunderstorms , Atmospheric Overlay Cycle, Tamil Nadu, Puduvai, Rain, Chennai Weather Center
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...