×

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ-க்கு கொரோனா தொற்று உறுதி: தனியார் மருத்துவமனையில் அனுமதி!!!

கள்ளக்குறிச்சி:  உளுந்தூர்பேட்டையில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை தனியார் மருத்துவமனையில் நோய் தொற்று பாதித்த எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அதன் வேகம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில்தான் தற்போது நாளுக்கு நாள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நோயை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையை அடுத்த கள்ளக்குறிச்சியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கு அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் அடிப்படையில், அதிமுக எம்.எல்.ஏவுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதன் முடிவுகள் வெளியான நிலையில், எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Ulundurpet MLA ,Corona ,hospital , Corona infection confirmed to Ulundurpet MLA: admitted to private hospital !!!
× RELATED கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி