×

வாகன விபத்தில் வாலிபர் பலி

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்தார். அப்போது, மேம்பால இறக்கத்தின், பக்கவாட்டில் இருந்த தெருவிளக்கு கம்பத்தில் மோதி, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த, குமார் (30) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.கோபால் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.


Tags : vehicle accident Youth ,vehicle accident , Vehicle accident, plaintiff, kills
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்...