×

மின்கம்பி அறுந்து விழுந்து 6 மாடுகள் பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பேடு கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான கிராமப்புற மக்கள் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். ஆடு, மாடு, கோழி, உள்ளிட்ட பல்வேறு கால்நடை வளர்த்து விவசாயிகள் பிழைப்பு நடத்திவருகின்றனர். இந்நிலையில் பொன்னேரி தாலுகா தேவம்பேடு பகுதியில் கம்பிகள் தாழ்வாக செல்கின்றது என தேவம்பேடு துணை மின் அலுவலகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் மேலும் மின்கம்பிகள் மிகத் தாழ்வாக சென்றுள்ளது அதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மாரி, வெங்கடேசன், நாகராஜ், வினோத், திருப்பதி, சபாபதி உள்ளிட்டோரின் விவசாயிகளின்  கால்நடைகளை நேற்று காலை எட்டு மணிக்கு மேய்ச்சலுக்காக அனுப்பிவைத்தனர்.

தேவம்பேடு அருகே  தைல மரம் ஓரமாக மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது தாழ்வாக உள்ள மின்கம்பியில் மாடுகளின் கொம்பு பட்டு மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் 6 மாடுகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இதையறிந்த விவசாயிகள் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய மின்வாரியம் நோக்கி வந்தனர். தகவலறிந்த கும்மிடிப்பூண்டி காவல் நிலைய சிறப்பு காவலர் தனசாமி  விரைந்து சென்று பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கலைந்து சென்றனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ‘‘தேவம்பேடு, உம்மிபேடு, சேகன்னியம், வழுதலம்பேடு, குருவி அகரம், ரெட்டம்பேடு், ஆத்துப்பாக்கம் உள்ளிட்ட விவசாய நிலங்களில் மின்கம்பி தாழ்வாகசெல்கிறது. குறிப்பாக நேற்று தேவம்பேடு பகுதியில் உயிர் இழந்த 6 மாடுகளுக்கும் மின்சார வாரியம் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.


Tags : Mink, cut, 6 cows, kills
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...